உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீர் அடுத்தடுத்து 5 வாகனங்கள் கவிழ்ந்தன

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீர் அடுத்தடுத்து 5 வாகனங்கள் கவிழ்ந்தன

செங்கம்:செங்கம் அருகே, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால், ஏரி உபரி நீர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து, ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த, இரண்டு நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது. இதில், செங்கம் அடுத்த தண்டம்பட்டு ஏரியில் ஏற்கனவே நீர் நிரம்பியுள்ள நிலையில், தற்போது பெய்த மழைக்கு உபரி நீர் வெளியேறி வருகிறது.இந்த உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பால், நீர் செல்ல வழியின்றி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை தெரியாத நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அவ்வழியாக சென்ற வாகனங்கள், குறுகலான அச்சாலை வளைவில் சென்றன. அப்போது, பைக், கார், சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி, ராட்சத சிமென்ட் பைப்கள் ஏற்றிச் சென்ற லாரி, சோப்பு ஆயில் ஏற்றி வந்த லாரி, என, மொத்தம் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. பகல் நேரத்தில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வாகன ஓட்டிகளை உடனடியாக காப்பாற்றினர். அதனால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, மேல் செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ