உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆந்திர பக்தை மயங்கி உயிரிழப்பு

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆந்திர பக்தை மயங்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அவ்வாறு வரிசையில் காத்திருக்கும் முதியோர், கர்ப்பிணியர், சிறு குழந்தைகள் வைத்திருப்போர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது கோடை வெப்பம் வீசுவதால், கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, நிழற்கூடை வசதிகளை செய்து தராததால் அவதிக்குள்ளாகி மயக்கமடைவதும், சோர்வடைவதும் நிகழ்கிறது.கடந்த, 24ம் தேதி திருவள்ளூரைச் சேர்ந்த ராஜேந்திரன், 59, என்ற பக்தர் கடும் வெயிலால் கோவிலில் மயங்கி விழுந்து இறந்தார்.நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாகமங்கமணி, 57, என்ற பெண் வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தார்.சுவாமி கொடிமரம் முன்புறம், சம்பந்த விநாயகர் சன்னிதி அருகே வரிசையில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, கோவிலில் உள்ள மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,அவர்களிடம் உயிர் காக்கும் அவசர கால மருந்து, உபகரணங்கள் இல்லாத நிலையில் வந்து பார்த்தனர்; அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.இருப்பினும் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர் ஒருவர் மற்றும் லண்டனைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாமல் போகவே, அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்தார்.திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sureshkumar
ஏப் 04, 2024 10:14

திருவண்ணாமலை கோயிலில் கோடை வெப்பத்தை சாமளிக்க கூடிய வகையில் பக்தர்களுக்கு முன் ஏற்பாடுகள் அவசியம் செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ