| ADDED : ஜூலை 31, 2024 10:48 PM
திருவண்ணாமலை:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராஜகணபதி நகர், ஜே.ஜே. நகர், பெருமாள் நகர், ராகவேந்திரா நகர், திருமலை நகர், சுண்ணாம்பு பேட்டை குடியிருப்பு பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு நகராட்சி துவக்க பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை, இப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த, 28 முதல், காத்திருப்பு போராட்டத்தில், நான்காவது நாளாக ஈடுபட்டனர். நேற்று அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், மக்களிடம் பேச்சு நடத்தினார். ஆயினும், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.