உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ரவுடியிசத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கூடுதல் டி.ஜி.பி.,

ரவுடியிசத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கூடுதல் டி.ஜி.பி.,

திருவண்ணாமலை:'கள்ளச்சாராயம் மற்றும் ரவுடியிசத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, திருவண்ணாமலையில் நடந்த, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.திருவண்ணாமலையில், கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், வேலுார் சரகத்திற்குட்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நடந்தது.திருவண்ணாமலை எஸ்.பி., கார்த்திகேயன், வேலுார் எஸ்.பி., மணிவண்ணன், திருப்பத்துார் எஸ்.பி., ஆல்பர்ட்ஜான், ராணிப்பேட்டை எஸ்.பி., கிரண்ஸ்ருதி மற்றும் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கூடுதல் டி.ஜி.பி., தேவாசீர்வாதம் பேசியதாவது: திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, கள்ளச்சாராய ஒழிப்பு, ரவுடியிசத்தை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.கள்ளச்சாராய விற்பனை மற்றும் காய்ச்சுதல், கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு ஏற்கனவே கைதாகி, ரவுடி பட்டியலில் உள்ளவர்களுடைய, தற்போதைய நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிவிக்கும் தகவல் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.போலீசாருக்கு கிடைக்கிற சிறு சிறு தகவல்களை கூட அலட்சியப்படுத்தாமல், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு எஸ்.பி.,க்கள், குறிப்பாக இரவு நேரத்தில் நேரில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை