உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

கண்ணமங்கலம்: செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த, எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் கார்த்திக், 35; கண்ணமங்-கலத்தை சேர்ந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடும் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மீதான புகார்களை விசா-ரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், வடக்கு மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கார்க்கிற்கு புகார் சென்றது.விசாரணையை தொடர்ந்து, கார்த்திக்கை 'சஸ்பெண்ட்' செய்து அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ