மகன் இறப்பு; அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு
செங்கம் : செங்கம் அருகே மகன் இறந்த செய்தி கேட்ட தாய், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாந்தி, 60. இவரது மகன் சின்னமணி, 34; கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனா, 30; வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இரு நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற சின்னமணி வீடு திரும்பவில்லை. புதுப்பாளையம் போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் தேடி வந்த நிலையில், செங்கம் அடுத்த நந்திமங்கலம் - பனை ஓலைப்பாடி சாலையில், சிறு பாலத்தின் அருகே சின்னமணி சடலம் கிடந்தது.இதுகுறித்து, சாந்திக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்ட அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, சரிந்து விழுந்த சாந்தி பரிதாபமாக இறந்தார். புதுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.