உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு

தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள, 2668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபடுகின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி திதி அதிகாலை, 3:53 முதல், இன்று அதிகாலை, 3:42 மணி வரை உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.கிரிவலம் சென்ற பக்தர்கள் கோயிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய, 2 கி.மீ.,க்கு, ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கூட்டம் அலைமோதியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ