மேலும் செய்திகள்
மாணவி பலாத்காரம் 3 வாலிபர்கள் கைது
01-Nov-2025
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்தவர், தொழிலாளி சிவா, 24. இவர் பிளஸ் 2, படித்து வந்த, 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடந்த, 2022, மார்ச், 11ல், பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து கடத்திச்சென்று, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். மாணவி புகார் படி, கீழ்பென்னாத்துார் போலீசார், சிவாவை போக்சோவில் கைது செய்தனர்.இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, நேற்று முன்தினம் மாலை, வாலிபர் சிவாவிற்கு, 20 ஆண்டு சிறை மற்றும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு தரப்பில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
01-Nov-2025