உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மாணவி பலாத்காரம் 3 வாலிபர்கள் கைது

மாணவி பலாத்காரம் 3 வாலிபர்கள் கைது

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே, 9ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த, 14, வயது, 9ம் வகுப்பு மாணவி அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த மாதம் விடுதியில் மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, வார்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, குழந்தைகள் நல காப்பகம் சார்பில் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், வேப்பூர், செக்கடி கிராமத்தை சேர்ந்த சச்சின், 25, அவரது தம்பி யோகேஷ், 24, மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னமணி, 26, ஆகிய மூவரும், மாணவி விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் நேரங்களில் தனித்தனியாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது . தண்டராம்பட்டு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று பேரையும் போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை