செங்கத்தில் ஏர்போர்ட் அமைச்சர் தகவல்
செங்கம்:திருவண்ணாமலை மேல்செங்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:மேல்செங்கத்தில், 11,000 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு வனத்துறையினர் நீலகிரி மரம் வளர்த்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீட்டு விமானம் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இது நல் வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.