உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கும்பாபிஷேகம் நடந்த கோவிலில் 8 மாதங்களில் உடைந்த கலசங்கள்

கும்பாபிஷேகம் நடந்த கோவிலில் 8 மாதங்களில் உடைந்த கலசங்கள்

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வென்குன்னறம் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, பிப்., 16ல் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டதால், கோபுரத்தில் உள்ள இரு கலசங்கள் உடைந்து விழுந்தன. மேலும், கோவில் சுவரில் பூசப்பட்ட பெயின்ட் உதிர்ந்து சுவர் பொலிவிழந்து வருகிறது.கோவில் வளாகத்தில் உள்ள தரைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்துஉள்ளன. மின் ஒயர்கள் செல்லும் குழாய்கள் உடைந்த நிலையில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் நிலையில், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்த 8 மாதங்களில் புனரமைப்பு செய்யப்பட்ட பல இடங்கள் சேதமடைந்துஉள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை