மேலும் செய்திகள்
கேரளா செல்லும் சிங்கம்புணரி மாட்டுச்சாணம்
23-Mar-2025
செய்யாறு:செய்யாறு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த, நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாடு பலியானது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெருங்கட்டூரை சேர்ந்தவர் நடராஜன்,60. எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, எருமை மாடுகளை, சுமங்கலி ஏரிக்கரையில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். வீட்டிற்கு சென்ற நடராஜன், சிறிது நேரம் கழித்து எருமை மாடுகளை ஓட்டி வர சென்றார். அப்போது ஒரு எருமை மாடு, வாய் கிழிந்து, பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்து, எருமை மாடு பலியானது தெரியவந்தது. நாட்டு வெடி குண்டு வைத்தவர்கள் யார் என மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Mar-2025