உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை

சாத்தனுார் அணை திறப்பு 14 ஊர்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை:தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், திருவண்ணாமலை சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதில், 119 அடி உயரம், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தனுார் அணைக்கு, தற்போது வினாடிக்கு, 3,500 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 113.90 அடி உயரத்துடன், 6,211 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.அணை பாதுகாப்பு கருதி, 1,350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கொளமஞ்சனுார், திருவடத்தனுார், புதுார் செக்கடி, சதா குப்பம் உட்பட, 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை