உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பூச்சி மருந்து காலி பாட்டிலை வாயில் வைத்த குழந்தை பலி

பூச்சி மருந்து காலி பாட்டிலை வாயில் வைத்த குழந்தை பலி

தண்டராம்பட்டு:விவசாய நிலத்தில் விளையாடிய 2 வயது குழந்தை, காலி பூச்சி மருந்து பாட்டிலை வாயில் வைத்ததில் பரிதாபமாக இறந்தது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த எதிர்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி காமாட்சி, 30; கூலித்தொழிலாளி. கணவர் இறந்து விட்டதால், 2 வயது மகள் ஜனனியுடன் வசித்து வந்தார்.குழந்தை கடந்த, 5ம் தேதி வீட்டின் அருகே விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்து காலி பாட்டிலை எடுத்து வாயில் வைத்துள்ளது. அதில் இருந்த சில சொட்டு பூச்சி மருந்தை அறியாமல் விழுங்க, திடீரென மயக்கமடைந்தது.இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. தண்டராம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை