உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நாட்டு வெடிகுண்டை மிதித்த கல்லுாரி மாணவர் படுகாயம்

நாட்டு வெடிகுண்டை மிதித்த கல்லுாரி மாணவர் படுகாயம்

வந்தவாசி: வந்தவாசி அருகே நாட்டு வெடிகுண்டை மிதித்த கல்லுாரி மாணவர் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தமிழரசன், 21; தென்னாங்கூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி, 3ம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் மாலை, பொன்னுார் ஏரியில், தன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்பகுதியில், காட்டுப்பன்றிக்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தெரியாமல் மிதித்தார். இதில், குண்டு வெடித்து, தமிழரசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை