பப்பாளி மரத்தை வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
கலசப்பாக்கம் : வீட்டின் அருகேயிருந்த பப்பாளி மரத்தை வெட்டியபோது, மின் ஒயரையும் சேர்த்து வெட்டிய மூதாட்டி, மின்சாரம் தாக்கி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 70. வீட்டின் அருகேயிருந்த பப்பாளி மரத்தை நேற்று காலை, 10:00 மணிக்கு வெட்டி கொண்டிருந்தார். அப்போது மின் ஒயர் தொங்கி கொண்டிருந்ததை கவனிக்காமல் மின் ஒயரையும் மரத்துடன் சேர்த்து பிடித்து வெட்டினார். இதில், மின்சாரம் தாக்கியதில், சரோஜா துாக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்கு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.