உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் பேராசிரியர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் பேராசிரியர் கைது

திருவண்ணாமலை:திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் செங்கம் தாலுகா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, செப்., 30 அன்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். போலீஸ் சோதனையில், மிரட்டல் என்பது தெரிந்தது. அழைப்பு வந்த மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரித்ததில், கோவையில் பதுங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஓரவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலு, 59, என்பவரை பிடித்து விசாரித்தனர்.தடயவியல் துறையில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றுள்ள இவர், கோவையில் தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.தன் நிலத்தை விற்பனை செய்ய, தடையின்மை சான்று பெற செங்கம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். நடவடிக்கை இல்லாததால், திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தார். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தி அடைந்து மிரட்டல் விடுத்தது தெரிந்தது.செங்கம் போலீசார் கதிர்வேலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ