திருப்பதி சென்ற ரயிலின் சக்கரத்தில் பறந்த தீ
கண்ணமங்கலம்:விழுப்புரத்திலிருந்து, வேலுார் வழியாக திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருவண்ணாமலை, கண்ணமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் ஐந்தாவது பெட்டியில் உள்ள சக்கரம் பழுதாகி சுழலவில்லை. இதனால், சக்கரம் தண்டவாளத்தில் உரசியபடி பயங்கர சத்தத்தை எழுப்பி, நெருப்புடன் ஓடியது. இதனால் ரயில் பயணியர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார். பின், கண்ணமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த பின், ரயில் சக்கரத்தை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அரை மணி நேரம் முயன்றும் முடியவில்லை.இதையடுத்து, 80 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டிய ரயிலை, 20 கி.மீ., வேகத்தில் இயக்கி, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பழுது பார்த்த பின், திருப்பதிக்கு புறப்பட்டது.