உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

திருவண்ணாமலை: கோடை வெப்பத்தால் திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பாண்டில், மூன்று மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.கடந்த ஜனவரியில் வேலுார் மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம், 4.39 மீட்டராக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், 6.26 மீட்டராக குறைந்து, 1.87 மீட்டர் குறைந்துள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் ஜனவரியில், 3.59 மீட்டராக இருந்த நிலையில், ஏப்ரலில், 5.75 மீட்டராக குறைந்து, 2.16 மீட்டர் குறைந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜனவரியில், 2.16 மீட்டராக இருந்த நிலையில், ஏப்ரலில், 4.01 மீட்டராக குறைந்து, 1.85. மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஜனவரியில், 4.39 மீட்டராக இருந்த நிலையில், ஏப்ரலில், 6.26 மீட்டராக குறைந்து, 1.87 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை