உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தள்ளி விட்டதில் மனைவி பலியானதால் கணவர் கைது

தள்ளி விட்டதில் மனைவி பலியானதால் கணவர் கைது

வெம்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெள்ளாளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர், பால் வியாபாரி பெருமாள், 42. இவரது மனைவி உமாராணி, 38. தம்பதிக்கு 16 மற்றும் 13 வயதில் இரு மகன்கள் உள்ளனர். பக்கத்து தெருவில் வசிக்கும் பெருமாளின் தந்தை கோபால், சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.தன் தந்தையை தன்னுடன் அழைத்து வந்து வீட்டிலேயே வைத்து கவனிக்க, பெருமாள் முடிவு செய்தார்; அதற்கு மனைவி உமாராணி எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை, இது தொடர்பாக, பெருமாள், உமாராணி இடையே ஏற்பட்ட தகராறில் பெருமாள், உமாராணியை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த கட்டிலில் தலை இடித்து ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினர் உமாராணியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பலியானார். துாசி போலீசார் பெருமாளை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி