மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 5 பேர் கைது
24-Aug-2025
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜீவராஜ் மணிகண்டன். இரண்டு ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்த இவர் மீது, கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இரண்டு மாதங்களுக்கு முன், போலீஸ் ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்பனை செய்த தகராறில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நான்கு நாட்களுக்கு முன், கஞ்சா விற்பனை தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும், செய்யாறு பகுதியில், கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து, வேலுார் டி.ஐ.ஜி., தர்மராஜ் விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
24-Aug-2025