உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், இன்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன், பல லட்சணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர், 'ஏகன் அனேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு, அதை கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdtmqowa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் பரணி தீபத்தை, கையில் ஏந்தியவாறு எடுத்து சென்று, அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகம் அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய் கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தபடி மாலை, 5:59 மணிக்கு வெளிவர காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர். திருவண்ணாமலையில் குவிந்த, பல லட்சக்கணக்கான பக்தர்கள், மஹா தீபத்தை தரிசித்து கிரிவலம் சென்றனர். இந்த மஹா தீபம், 11 நாட்கள் எரியும், இவை, 40 கி.மீ., துாரம் வரை தெரியும்.திருவண்ணாமலை மஹா தீபம் நேரலையை பார்க்க: https://www.dinamalar.com/videos/live-and-recorded/videos/6593


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ranjani
டிச 13, 2024 21:03

ஓம் நமசிவாய


T.sthivinayagam
டிச 13, 2024 19:00

பாரத திரு நாட்டிற்கு நானே தலைமை. நானே அருள்பாளிப்பவன். நான் இருக்கும் இடமே தலைமையிடம், என்று தீப ஒளியாய் காட்சி தந்த அண்ணாமலையாருக்கு அரோகரா


Dharmavaan
டிச 13, 2024 18:46

என்ன தான் நாத்திகம் பேசினாலும் மக்கள் அதை ஏற்கவில்லை. அவர்களது குடும்ப பெண்களே ஏற்கவில்லை.


Barakat Ali
டிச 13, 2024 18:44

லட்சக்கணக்கானவர்கள் பக்திப் பரவசம் ...... இதே பரவசத்தோடு சனாதனத்தை ஒழிக்கப் புறப்பட்டவங்களுக்கு ஓட்டு போட்டுடுங்கப்பு .....


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 23:04

இன்னிக்கி தான் ஒழுங்கா கருத்து போட்டிருக்கிறீர்கள். திருந்தி விட்டீர்கள். நல்லது.


N.Purushothaman
டிச 13, 2024 18:29

ஓம் நமசிவாய ...... உண்ணாமலையார் சமேத அண்ணாமலையாருக்கு அரோகரா ....


புதிய வீடியோ