உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ராமர் பாடல் பஜனையில் இஸ்லாமியர் பங்கேற்பு

ராமர் பாடல் பஜனையில் இஸ்லாமியர் பங்கேற்பு

திருப்பத்துார் : திருப்பத்துாரில், ராமர் உருவ சிலை வைத்து நடத்தப்பட்ட சிறப்பு பஜனையில், இஸ்லாமியர்கள் பங்கேற்று, ராமரின் பஜனை பாடல்களை பாடினர். அயோத்தி ராமர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி, திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரை பஸ் ஸ்டாண்டில், கந்திலி, பா.ஜ., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், ராமர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு பஜனை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த காதர் பாய் குடும்பத்தினர் பங்கேற்று, ராமர் பஜனை பாடல்களை பாடி, ராமரை வணங்கினர். மேலும், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவிலில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, மஹா சுதர்சன யாகம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு அகண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில், ஏராளமான, பா.ஜ., வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்