வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு தற்போது காலி செய்ய செல்வதை விட, முதலில் மாற்று குடியிருப்புகள் வசதி செய்து தரவும். அதன்பின் காலி செய்யுமாறு செல்லவும்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றிட, வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில், 25,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கு சில வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், பெஞ்சல் புயல் மழை காரணமாக, திருவண்ணாமலையில், கடந்த, 1ம் தேதி அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் ராட்சத பாறை உருண்டு வந்து, மலை அடிவாரத்தில். வ.உ.சி., நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. வீட்டினுள் இருந்த, 7 பேர் சிக்கி பலியாகினர். இதை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முதற் கட்டமாக வருவாய்த்துறை சார்பில், 1,535 வீட்டின் உரிமையாளர்களுக்கு, மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய விருப்பமா, இல்லையா என குறிப்பிட்டு, தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு தற்போது காலி செய்ய செல்வதை விட, முதலில் மாற்று குடியிருப்புகள் வசதி செய்து தரவும். அதன்பின் காலி செய்யுமாறு செல்லவும்