உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பிளஸ் 1 மாணவி கடத்தல் 3 பேருக்கு போக்சோ

பிளஸ் 1 மாணவி கடத்தல் 3 பேருக்கு போக்சோ

திருவண்ணாமலை:காதலிப்பதாக ஏமாற்றி, பிளஸ் 1 மாணவியை கடத்திய வழக்கில், 3 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.திருவண்ணாமலை, தேனிமலையைச் சேர்ந்தவர் சத்தியபிரகாஷ், 22. இவர், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை ஓராண்டாக காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்தார். மாணவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில நாட்களுக்கு முன், மாணவியை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றார். மாணவியின் பெற்றோர், திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில், தேனிமலையைச் சேர்ந்த சத்தியபிரகாஷ், மாணவியை கடத்தி, நண்பரின் வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு, திருவண்ணாமலையிலுள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். சத்தியபிரகாஷூக்கு அடைக்கலம் கொடுத்த, அவரது நண்பரான தேனிமலையைச் சேர்ந்த ஆனந்த், 20, அவரது அக்கா மைதிலி, 28, மற்றும் சத்தியபிரகாஷ் ஆகிய மூவரை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை