உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பெண்ணை கொன்று புதைத்த கள்ளக்காதலனுக்கு காப்பு

பெண்ணை கொன்று புதைத்த கள்ளக்காதலனுக்கு காப்பு

போளூர்:பெண்ணை கொன்று புதைத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அடுத்த முதலை மடூரை சேர்ந்த குப்பன் மனைவி தீபா, 40. இவர்களுக்கு, 10 வயதில் மகன் உள்ளார். தீபா, கணவனுடன் ஏற்பட்ட தகராறில், சில ஆண்டுகளாக பிரிந்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இரு மாதங்களாக அவர் மாயமாகி இருந்தார். உறவினர்கள் தேடியபோது, மலை கிராமமான கல்லாத்துாரை சேர்ந்த ராமசாமி, 50, என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிந்தது. அவரிடம் உறவினர்கள் விசாரித்ததில், தீபாவை களம்பூர் அடுத்த எட்டிவாடி வனப்பகுதியில் கொலை செய்து, உடலை புதைத்ததாக தெரிவித்தார். போளூர் போலீசார், ராமசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், 'பல ஆண்களுடன் தீபா தொடர்பு வைத்திருந்தார். அது குறித்து கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டதில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து புதைத்தேன்' என, தெரிவித்துள்ளார். தீபா உடல் தோண்டி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை