பேருந்தில் மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ்
பாகாயம் : பேருந்தில், மூதாட்டியிடம் நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கோபி நகரை சேர்ந்தவர் உமாராணி, 70. இவர், அக்., 3ல் திருவண்ணாமலையில் இருந்து, வேலுார் மாவட்டம், விருப்பாச்சிபுரத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்தார்.பேருந்தில் கூட்டத்தை பயன்படுத்தி, மர்மநபர் ஒருவர் மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்துள்ளார். தொடர்ந்து, பாகாயம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, உறவினர் வீட்டிற்கு சென்றபோது தான், கழுத்தில் அணிந்திருந்த, நான்கு சவரன் தங்க சங்கிலி, 1,500 ரூபாய் காணாமல் போனது தெரிந்தது.உமாராணி புகாரின்படி, பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.