உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கோவிலுார் பஞ்.,க்கு உட்பட்ட, சேரமத்துார் மற்றும் மேல் சேரமத்துார் கிராமங்களுக்கு இடையே செல்லும் சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ --- மாணவியர் அதில் சிக்கினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கயிறு கட்டி பாதுகாப்பாக மாணவ - மாணவியரை காப்பாற்றினர். மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர, அங்கு பாலம் அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை