மேலும் செய்திகள்
வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
04-Sep-2024
ப.வேலுார்: பரமத்தியில், வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 7 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தியை சேர்ந்தவர் ஜெயபால், 58; வக்கீல். இவர், கடந்த, 15ல் குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். பின், சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, 16 இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு, 7 லட்சம் ரொக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி குடம், தட்டு, குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ஜெயபால், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி எஸ்.ஐ., மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பணம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
04-Sep-2024