உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்; மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்; மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாறை, மண் சரிந்து, விபத்து நடந்த இடத்தில் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே மலையிலிருந்த பாறை உருண்டதில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஒரு வீட்டில், ராஜ்குமார், 32, அவர் மனைவி மீனா, 26, மகன் கவுதம், 9, மகள் இனியா, 7, உறவினர்களின் குழந்தைகளான மகா, 12, ரம்யா, 12, வினோதினி, 14, ஆகிய ஏழு பேர் மண்ணுக்கடியில் சிக்கினர். மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oy7nghs4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐந்து உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில், உடல் பாகங்கள் பிய்ந்தவாறு கண்டெடுக்கப்பட்டன. இருவர் உடலை கண்டெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மண் சரிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,03) பாறை, மண் சரிந்து, விபத்து நடந்த இடத்தில் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணின் தரம், மண் சரிவுக்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருவர் உடலை விரைவில் கண்டெடுக்குமாறு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சாலை மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
டிச 03, 2024 17:16

இவிங்க எதுக்கு? அண்ணாமலையைக் கேட்டா கரெக்டான காரணம் சொல்லுவாரு.


Madras Madra
டிச 03, 2024 12:59

இது வரை இங்கு இப்படி நடந்தது இல்லை


Troo Picture
டிச 03, 2024 12:14

இந்த சாலை அரசியல் இப்போ ஒரு பேஷன் ஆகிவிட்டது. பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றி கவலை இல்லை. இவர்கள் சாலை மறியல் செய்தால் உடனடியாக அந்த உடல்கள் மீட்கப்படுமா? அதுபோல் இன்று காலை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் எதற்கு? வெள்ளம் காரணமாக கொஞ்சம் சாலைகள் ஒருவழிப் பாதை ஆக்கப்பட்டனவாம். அதர்க்காம் ... என்ன உளறல் இது? ரெண்டு பக்கமும் 4 கி மீ தூரத்துக்கு வாகனங்கள் நின்றது மிச்சம். சாலை மறியல் ஒரு கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட வேண்டும்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 03, 2024 12:06

எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் கேட்கிறமாதிரி முக்கியமான கேள்விகளை கேட்டால் பதில் அளிப்பார்கள் பாமகவின் தந்தையும் மகனும் தினமும் 4 கேள்விகள் கேட்கிற மாதிரி இவரும் கேட்டால் யார் தான் பதில் அளிப்பார்கள்???


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 11:16

செம காமெடி கருத்து. இப்போ ஐ ஐ டி பேராசிரியர்கள் திருவண்ணாமலை வந்திருக்கிறார்களே, அவர்கள் கோவிலுக்கு வந்திருக்கிறார்களா இல்ல வேற விஷயமா வந்திருக்கிறார்களா? அடுத்து இறைவன் யார் வீட்டின் மீது பாறையைத் தள்ளி விடப் போகிறார்? ஏன் சார், இப்படி அரசியல் என்று நினைத்துக்கொண்டு இறை நிந்தனை செய்கிறீர்கள்??


Narayanan
டிச 03, 2024 10:37

உதயநிதியின் சமீபத்திய திருவண்ணாமலை பயணம் இப்படி ஒரு சோகத்தை உருவாகி இருக்கிறது . அது அக்னி பூமி . இறை நம்பிக்கை முக்கியம் அங்கே போவதற்கு . அங்கே போன பிறகு நான் வேறு விஷயத்திற்கு வந்தேன் என்னும்போதே இப்படி ஒரு கொடூரே சம்பவம் நடந்திருக்கிறது .


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 11:13

ஓஹோ, இந்தியாவில் மட்டுமே இருக்கும் 130 கோடிப்பேர்களில், துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலைக்கு வேற விஷயமா வந்ததால், ஏதோ ஒரு அப்பாவியின் குடும்பத்தை இறைவன் பாறையைப் போட்டு நசுக்கிட்டாரா? ஏன் சார் இப்படி கடவுளை அவமதிக்கிறீர்கள்? வணிக நிமித்தமாக ஆயிரக்கணக்கில் மக்கள் தினம் தினம் திருவண்ணாமலை க்கு வந்து போகிறார்கள். அவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உள்ளவர்களா? தெரியுமா உங்களுக்கு? அப்போ இறை நம்பிக்கை இல்லாதவன் திருவண்ணாமலை க்கு வந்தால், மண்சரிவு, பாறை விழுதல், வெள்ளம் எல்லாம் இறைவன் உருவாக்கி குழந்தைகளைக் கூட சாவடிச்சுடிவாரோ??


ஸ்ரீ
டிச 03, 2024 11:19

Maybe Correct


கனோஜ் ஆங்ரே
டிச 03, 2024 11:40

முழக்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சு போடாதீங்க மிஸ்டர் நாராயணன்.... இறை நம்பிக்கை உள்ள ஆள் நீங்க, நானும்தான்... ஒரே ஒரு கேள்வி... மலையும் சமவெளியும் சேரும் இடத்தில் வீடு கட்டுவது என்றைக்கு இருந்தாலும் உயிருக்கு ஆபத்து என்பதை அந்த இறைவன் ஏன் அவர்களுக்கு உணர்த்தவில்லை... விதி வலிது.. என்பதை மறந்துவிடாதீர்.. நீங்கள் சொல்லும் ஜோதி வடிவமான ஈசனே... விதியின் காரணமாக பிச்சை எடுத்து பிச்சாண்டி என்று பெயரெடுத்தான்... விதி வலிது.. அந்த விதியை மனிதப் பதரான நீங்களும், நம்மை படைத்த இறைவனும் வெல்ல நினைத்தால், அது நடவாது... விதி வலிது...?


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 03, 2024 12:07

மூடர் கூட்டம் அப்போ அங்கே ஆன்மீக பக்தியோடு இருப்பவர்களை கடவுள் தண்டித்து விட்டார் என்கிறாரோ அபத்தம்