உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி

மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் கடந்த டிச., 1ல், ஏற்பட்ட நிலச்சரிவில் மலையிலிருந்து உருண்டு, அந்தரத்தில் நிற்கும், 40 டன் பாறையை உடைக்கும் பணியில், நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையடிவாரத்தில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. 'பெஞ்சல்' புயல், மழையால், திருவண்ணாமலையில் கடந்த, டிச., 1ம் தேதி அண்ணாமலையார் மலையில், ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏழு பேர் பலியாகினர்; 20 வீடுகள் சேதமடைந்தன.அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில், 40 டன் பாறை, மலையிலிருந்து உருண்டு, வ.உ.சி., நகர், 9வது தெரு, மலையடிவாரத்தில், எந்த நேரத்திலும் உருண்டு, வீடுகளின் மீது விழும் அபாய நிலையில், குறைவான பிடிமானத்துடன், அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. அதை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில், திருச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பாறை உடைக்கும் நிபுணர் குழுவினர் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.பாறையில் ஆங்காங்கே துளையிட்டு, வெடிபொருள் நிரப்பி, அதிகளவு சிதறாமல் வெடிக்கும் முறையில், பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், சில பாறைகள் மலையிலிருந்து உருண்டு வரும் அபாய நிலையில் உள்ளன. அவற்றையும் உடைக்கும் பணியை செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை