மேலும் செய்திகள்
தமிழக அரசு டாக்டர் புதுச்சேரியில் தற்கொலை
21-Oct-2025
பெரணமல்லுார், திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லுாரை அடுத்த தவணியை சேர்ந்தவர் சேகர், 40; அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மனைவியான, 25 வயது பெண், கடந்த, 6ம் தேதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர் வெளியே ஓடிவந்து அலறி கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் சேகர் ஓட்டம் பிடித்தார். இதில் மனவேதனை அடைந்தவர், கடந்த, 8ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்த நிலையில், நேற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின்படி பெரணமல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, சேகரை நேற்று கைது செய்தனர்.
21-Oct-2025