மேலும் செய்திகள்
மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்
02-Sep-2025
தி.மலை:திருவண்ணாமலை மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. திருவண்ணாமலையில் உள்ள, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். நேற்று மாலை, 6:00 மணியளவில் மலையின் வடக்கு பக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், மலை மீது தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில், 3 ஏக்கர் பரப்பளவில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தன்னார்வலர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மலையை சுற்றிய பகுதிகளில் புகை மூட்டம் காணப்பட்டது.
02-Sep-2025