உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மனநலம் பாதித்த பெண்ணை சீண்டிய முதியவருக்கு கம்பி

மனநலம் பாதித்த பெண்ணை சீண்டிய முதியவருக்கு கம்பி

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். மற்றொரு, 35 வயது மகள் மனநலம் பாதித்து வீட்டில் உள்ளார். கடந்த, 24ல் மூதாட்டி ரேஷன் கடைக்கு மகளை அழைத்துச் சென்றார். அவ்வழியாக வந்த, அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி, 65, 'ஏன் நடந்து செல்கிறீர்கள், பைக்கில் அழைத்து செல்கிறேன்' என, கூறி அவர்களை, ரேஷன் கடைக்கு அழைத்து சென்றார். அப்போது, மூதாட்டி, வீட்டிற்கு சென்று மொபைல்போனை எடுத்து வந்து தருமாறு சுப்பிரமணியிடம் கூறினார். மனநலம் பாதித்த பெண்ணுடன் வீட்டிற்கு சென்ற சுப்பிரமணி, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான அக்காட்சியை, வெளிநாட்டில் வசிக்கும் மூதாட்டியின் மற்றொரு மகள் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ