மேலும் செய்திகள்
கிணற்றில் தாய், குழந்தை சடலம்
16-Jun-2025
கீழ்ப்பென்னாத்துார்:திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்துார் அடுத்த கரிக்கலாம்பாடியை சேர்ந்தவர் விக்னேஷ், 27; பெங்களூரில் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திருவண்ணாமலை அடுத்த வாணாபுரத்தை சேர்ந்த உமாதேவி, 25. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. விக்னேஷ் குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.சில நாட்களுக்கு முன் மனைவி, குழந்தையுடன், சொந்த ஊரான கரிக்கலாம்பாடி கிராமத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, விக்னேஷின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில், குழந்தையுடன் உமாதேவியின் சடலம் மிதந்தது. கீழ்ப்பென்னாத்துார் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர். கீழ்ப்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், உமாதேவி நான்கு மாத கர்ப்பமான நிலையில், பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது பெண் குழந்தை என, தெரியவந்தது. கணவரின் குடும்பத்தினர் கர்ப்பத்தை கலைக்கக் கூறியதால், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
16-Jun-2025