உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வாழ்வின் கலங்கரை விளக்கம் கல்லூரி மாணவர்களுக்கு மாஜி எஸ்.பி., "பூஸ்ட்

வாழ்வின் கலங்கரை விளக்கம் கல்லூரி மாணவர்களுக்கு மாஜி எஸ்.பி., "பூஸ்ட்

மணப்பாறை: ''அறிவுப்பணியில் முதன்மை வகிக்கும் கல்லூரிகள் வாழ்வின் கலங்கரை விளக்கம் போன்றது,'' என கல்லூரி முதலாமாண்டு துவக்கம் விழாவில், மாணவர்கள் மத்தியில் திருச்சி மாஜி எஸ்.பி., பேசினார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆலத்தூர் ஆதவன் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லூரி தலைவர் சரவணப்பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் சூர்யா சுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் ஓய்வு பெற்ற திருச்சி எஸ்.பி., கலியமூர்த்தி முதலாமாண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:எதுவும் தெரியாமல் வரும் ஒருவனை எல்லாக் கலைகளையும் அறிந்துக்கொள்ள செய்யும், அறிவுப்பணியில் முதன்மை வகிக்கும் கல்லூரிகள் வாழ்வின் கலங்கரை விளக்கம் போன்றது. ஆசிரியர் பணி விலை மதிப்பற்றது.நாம் என்னவாக ஆக விரும்புகிறோமோ அதை அடைய உயர்ந்த சிந்தனை வேண்டும். நல்ல எண்ணம், நம்மால் எதையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறயே நீ அதுவாகவே ஆகிவிடுவாய்.அமெரிக்காவில் கல்வியை மட்டும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவில் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர். அதனால் தான் அமெரிக்கர்களைக் காட்டிலும் இந்திய இளைஞர்களால் புதிய, புதிய சாதனைகளை படைக்க முடிகிறது.உழைப்பு, முயற்சி, காலம் தவறாமை ஆகியவை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். கடந்து போன காலத்தை வாங்கும் அளவுக்கு உலகத்தில் பணக்காரன் எவரும் இல்லை. பிறப்பு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல்காதர், பொருளாளர் கருராஜகோபாலன், அறங்காவலர்கள் வக்கீல் கிருஷ்ணகோபால், மோசஸ், கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை