உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணப்பாறை எம்.எல்.ஏ.,நன்றி அறிவிப்பு பயணம்

மணப்பாறை எம்.எல்.ஏ.,நன்றி அறிவிப்பு பயணம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு நாட்களாக மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., சந்திரசேகர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கடந்த தேர்தலில் மணப்பாறை சட்டசபை தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் சந்திரசேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த இரண்டு நாட்களாக இவர் துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.துவரங்குறிச்சி, பொன்னம்பட்டி, அடைக்கம்பட்டி, கோவில்பட்டி, மினிக்கியூர், வி.இடையபட்டி, தாதனூர், வ.கைகாட்டி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நன்றி தெரிவித்தார். எம்.எல்.ஏ., சந்திரசேகருக்கு சென்ற வழிநெடுகளிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர்.அப்போது அவருடன் அவை தலைவர் செந்தாமரைக்கண்ணன், தொகுதி இணை செயலாளர் பெருமாள், நகர செயலாளர் கனி, மாவட்ட கவுன்சிலர் ராஜ்மோகன், ராமமூர்த்தி, கண்ணதாசன், சின்னதங்கம், அழகு மற்றும் ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை