உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஏர்போர்ட்டில் ரூ.1.53 கோடி தங்க நகைகள் பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.1.53 கோடி தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி:மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை, 'ஏர் ஏசியா' விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 40 வயது பெண்ணை சோதனையிட்டபோது, அவரது கைப்பைகளில், 2.291 கிலோ நகைகள் இருந்தன.அவற்றை அவர் உரிய அனுமதியின்றி எடுத்து வந்ததால், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்து, அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு, 1.53 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை