உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பட்டா கத்தியுடன் வழிப்பறி: போலீஸ்காரருக்கு வெட்டு

பட்டா கத்தியுடன் வழிப்பறி: போலீஸ்காரருக்கு வெட்டு

திருச்சி: திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் மர்ம நபர்கள் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி கோட்டை ஸ்டேஷன் போலீஸ்காரர் அப்துல் காதர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்ட ரவுடிகள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த ரவுடிகளில் ஒருவன் கையில் வைத்திருந்த பட்டாகத்தியால் அப்துல் காதரின் வலது கை, கன்னத்தில் வெட்டியதில், அவர் படுகாயம் அடைந்தார். உடனே ரவுடிகள் மூவரும் தப்பியோடி விட்டனர். ரவுடிகள் பாலாஜி (17), சிலம்பு (16), நித்திஷ் (17) ஆகிய மூவரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி