உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்

கனடா நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் தோட்டா பறிமுதல்

திருச்சி:திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்ற விமான பயணியிடம், தோட்டா ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்டு வில்சன், அவரது மனைவி பிரிட்டானி சீலியுடன், 17ம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம், விமானத்தில் திருச்சி வந்த அவர், நேற்று அதிகாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை செல்ல இருந்தார்.அவரது பையில், வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பதை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்த அவர்கள், அது வேட்டை துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா என்பதை அறிந்தனர்.அவர், உரிமம் வைத்திருந்த போதிலும், விமானத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தோட்டாவை பறிமுதல் செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை