மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்
03-Sep-2024
வாலிபர் கொலையில் நான்கு பேர் கைது
14-Sep-2024
திருச்சி:திருச்சி, கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் பிருதிவிராஜ், 48; திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி. திருமணமாகவில்லை. உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சி, 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார். நேற்று மதியம், இவரது வீட்டில் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன் பின், மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில், உடற்பயிற்சி செய்ய பயன்படும் கர்லா கட்டை கிடந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே, குடும்பத்தாருடன் தகராறு செய்து விட்டு, மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனால், கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Sep-2024
14-Sep-2024