உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரயிலில் அடிபட்டு தந்தை, மகள் பலி

ரயிலில் அடிபட்டு தந்தை, மகள் பலி

திருச்சி:பெரம்பலுார் மாவட்டம், ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை, 60. இவர் நேற்று முன்தினம் தன் இளைய மகள் தேவியை, திருச்சி பெரியார் அரசு கல்லுாரியில் எம்.எஸ்சி., வேதியியல் பாடப்பிரிவில் சேர்க்க, மூத்த மகள் பழனியம்மாளுடன் திருச்சிக்கு சென்றார். அங்கு, மகளை கல்லுாரியில் சேர்த்த பின், அன்று மாலை மூவரும் திருச்சி - விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில், இரவு 9:00 மணிக்கு செந்துறைக்கு வந்தனர்.அங்கிருந்து இரவு 9:15 மணிக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் பாதையை தேவி கடந்தார். அவரை தொடர்ந்து வந்த பிச்சைபிள்ளை, பழனியம்மாள் ஆகியோர் ரயில் பாதையை கடக்க முயன்ற போது, நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி சென்று கொண்டிருந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை