உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்; அறிவுசார் மைய புல்வெளி சேதம்

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்; அறிவுசார் மைய புல்வெளி சேதம்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள நகராட்சிகக்கு சொந்தமான இடத்தில், 1.5 கோடி ரூபாய் செலவில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டது. போட்டி தேர்வில் பங்கேற்பவர்களுக்காக கட்டப்பட்ட இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின், ஜனவரியில் திறந்தார்.இந்த அறிவுசார் மையத்தை மணப்பாறை நகராட்சி நிர்வாகம் நிர்வகிக்கிறது. மையத்தின் வாசலில், படிக்க வருபவர்கள் 'ரிலாக்ஸ்' செய்து கொள்ள, புல்தரையும், மரங்களும் நடப்பட்டு, பூங்கா போல அமைக்கப்பட்டது.அந்த புல்தரை மற்றும் மரங்கள் அமைக்க மட்டும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பச்சை பசேல் என இருந்த புல்வெளி, தற்போது காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. நுாலகத்தை நிர்வகிக்கும் நகராட்சி நிர்வாகம், புல்தரைக்கு தண்ணீர் விட்டு, அதை உயிர்ப்புடன் வைக்காமல், கவனக்குறைவாக செயல்பட்டு வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை