ஆப்பரேஷன் கஞ்சா வீடு வீடாக சோதனை
திருச்சி:திருச்சியில் அதிகமான கஞ்சா புழக்கத்தில் இருக்கும் ராம்ஜி நகர் பகுதியில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் நேற்று வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆப்பரேஷனுக்கு, 'ஆப்பரேஷன் கஞ்சா' என போலீசார் பெயரிட்டனர். கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.