உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரவுடி துாக்கிட்டு தற்கொலை

ரவுடி துாக்கிட்டு தற்கொலை

திருச்சி:திருச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால், ரவுடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, 36. இவர் மீது திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இளையராஜாவுக்கு கனகா என்ற மனைவியும், இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான இளையராஜாவிடம், கனகா சண்டை போட்டுவிட்டு, இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு மகனுடன் வசித்து வந்த இளையராஜா, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில், நேற்று காலை தனது வீட்டில், மனைவியின் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை