உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / செப். 17 ல் தமிழகம் முழுவதும் பஸ் மறியல்: போக்குவரத்து ஓய்வு பணியாளர் சங்கம் அறிவிப்பு

செப். 17 ல் தமிழகம் முழுவதும் பஸ் மறியல்: போக்குவரத்து ஓய்வு பணியாளர் சங்கம் அறிவிப்பு

திருச்சி, :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 17 ம் தேதி, தமிழகம் முழுவதும் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர் மற்றும் பென்ஷனர் சங்கத்தின் பேரவை தலைவர் மருதமுத்து, செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர், திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற 95 ஆயிரம் பேரின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு, தமிழக அரசு, இதுவரை தீர்வு காணவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்கப்படவில்லை. பணியின் போது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும், பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செப். 17 ம் தேதி, தமிழகம் முழுவதும் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை