உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

திருச்சி : வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 45. இவர், சில நாட்களுக்கு முன், துவரங்குறிச்சி பகுதியில், 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வேலைக்கு சென்றுவிட்டு வந்த தாத்தாவும், அந்த பெண்ணின் தாயும் தெரிந்து கொண்டு, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, நேற்று காலை ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ