உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  4,000 போதை மாத்திரை பதுக்கிய 5 பேர் கைது

 4,000 போதை மாத்திரை பதுக்கிய 5 பேர் கைது

திருச்சி: திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர். திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியில் ஒரு வீட்டை சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில், 4,000 'டாபென்டாடால்' எனும் வலி நிவாரணி மாத்திரைகள், சிரிஞ்சுகள் போன்றவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த மருத்துவப் பிரதிநிதி வெங்கடேஷ், 25; கேசவராஜ், 24; சதீஷ்குமார், 26; ரவுடி பிரசாந்த், 24; கண்ணன், 28, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் போதை மாத்திரைகளை விற்க பயன்படுத்திய இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி