உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கனிமொழி பற்றி அவதுாறு மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது

கனிமொழி பற்றி அவதுாறு மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது

உறையூர்:தி.மு.க., -- எம்.பி.,யும், மகளிரணி செயலருமான கனிமொழியை அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட, பா.ஜ., மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, தி.மு.க.,வில் துணை பொதுச்செயலராகவும் உள்ளார்.இவரை பற்றி, திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகரான ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 52, என்பவர், அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஸ்ரீரங்கம் தி.மு.க., வட்டச்செயலர் ஹரிஹரன் என்பவர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார்.அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, சீனிவாசனை நேற்று கைது செய்தனர். அவர், பா.ஜ.,வில் முன்னாள் மாநில அமைப்புசாரா அணி செயலராக இருந்தார். இப்போது, மாவட்ட செயலர்களில் ஒருவராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை