உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் வெடிகுண்டு மிரட்டல் 2 பள்ளிகளில் போலீஸ் சோதனை

திருச்சியில் வெடிகுண்டு மிரட்டல் 2 பள்ளிகளில் போலீஸ் சோதனை

திருச்சி, நவ. 12-திருச்சியில் இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.திருச்சி மாநகரில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கடந்த ஒரு மாதமாக பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அப்போதெல்லாம் நடந்த சோதனையில், மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது.இந்நிலையில், நேற்று திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்துாரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் மெட்ரிக்., பள்ளி மற்றும் திருச்சி தேவதனத்தில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து வெடிகுண்டு செயல் இழப்பு போலீசார், இரு பள்ளிகளிலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பதால், மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்..................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி